நாகப்பட்டினம் MLAவுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு
நாகப்பட்டினம் MLA ஆளுர் ஷா நவாஸுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. எஸ்ஐஓ சார்பாக புத்தங்கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் MLA ஆளுர் ஷா நவாஸுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. எஸ்ஐஓ சார்பாக புத்தங்கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
எஸ்ஐஓ மாநிலத் தலைவர், நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கரூர் மற்றும் புதுக்கோட்டையில் ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஜாஃபர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.
எஸ்ஐஓவின் தேசிய கல்வி வளாகச் செயலாளர் இம்ரான் ஹுசைன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள கல்வி வளாகங்களில் எஸ்ஐஓ உறுப்பினர்களுடன் சந்திப்பு, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, இஃப்தார் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது.
எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம், மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.
அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.