தமிழகத்துக்கு…
கோயம்புத்தூர்எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் EK அவர்கள் கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். அதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் மாணவர், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் EK அவர்கள் கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். அதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் மாணவர், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
SoulSpark: Illuminate Ethics பரப்புரையை முன்னிட்டு சென்னையில் கல்வி வளாகப் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் JIH மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுதீன், மாநிலச் செயலாளர் ஃபெரோஸ் கான், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தமிழகத் தலைவர் கமாலுதீன், SIO முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பீர் முஹம்மது, ஊடகவியலாளர் மோகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் நாற்பது மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நாடு தழுவிய கல்வி வளாகப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் SIO சார்பாக மஸ்ஜிதுல் ஹுதாவில் Students Meet நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வை I.ஆதில்கான் திருமறை வசனங்கள் ஓதித் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் A.S.இப்ராஹிம் தலைமை உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் SIO உறுப்பினர் அப்துல் அஹத் சாதியவாதம் குறித்து உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் 'கல்வி வளாகத்தை மாற்றியமைப்போம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். சீறா பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், […]
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக 'மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்' சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
எஸ்ஐஓ சார்பாக "பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?" என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் கல்வியாளர் வாஜித் ஷா கருத்துரை நிகழ்த்தினார்.
எஸ்ஐஓ சார்பாக “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஷாஹுல் ஹமீது உமரீ கருத்துரை நிகழ்த்தினார்.
மாநில அளவில் ʾĪMĀN ENCLAVE எனும் ஜூனியர் SIO அபிமானிகளுக்கான முகாமும், ஜூனியர் SIO பொறுப்பாளர்களுக்கான முகாமும் நடைபெற்றது. இதற்கான பங்கேற்பாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்தனர். நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் வசித்துவரும் இந்துக் காட்டுநாயக்கர் என்ற சாதியைச் சார்ந்த மக்களுக்கு சாதிச் சான்றிதழ் சரியாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் அந்தச் சமுதாய மாணவர்கள் 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலை உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை வைத்தது எஸ்ஐஓ. நேற்று எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டது. இந்துக் காட்டுநாயக்கர் சமுதாயத்தினரையும், […]
மதுரை இஸ்லாமிக் செண்டரில் Let's Crack என்ற நேர்காணலுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு SIO மாநில இணைச் செயலாளர் முஹம்மது முபீன், சாலிடாரிட்டி அமைப்பின் தஞ்சை தலைவர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
எம்.ஏ. தொல்லியல் படிப்பு எம்.ஏ. வரலாறு படிப்பிற்கு நிகரல்ல என்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் திரும்பப் பெறக் கோருமாறு சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது. அவரிடம் இந்த அரசாணையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து SIO மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் வாஹித் எடுத்துரைத்தார். இவ்விஷயம் தனது கவனத்துக்கு வந்ததாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் வெங்கடேசன் கூறினார். சந்திப்பின்போது JIH மற்றும் SIOவின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
எஸ்ஐஓ உறுப்பினர்களுக்கான தஅவா பயிற்சி முகாம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐஐசி அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம், அதற்குரிய வழிமுறைகள் சார்ந்தும், அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் சார்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிற மதங்கள், நவீன கால சித்தாந்தங்கள் குறித்த விரிவான பார்வையை சிறப்புரையாளர்கள் வழங்கினர். நிகழ்வில் உரை, கலந்துரையாடல், PPT Presentation போன்றவை இடம்பெற்றன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அதீப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சர்ஜூன் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.