Loading....

Past Events

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் சந்திப்பு

மதுரை

எம்.ஏ. தொல்லியல் படிப்பு எம்.ஏ. வரலாறு படிப்பிற்கு நிகரல்ல என்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் திரும்பப் பெறக் கோருமாறு சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது. அவரிடம் இந்த அரசாணையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து SIO மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் வாஹித் எடுத்துரைத்தார். இவ்விஷயம் தனது கவனத்துக்கு வந்ததாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் வெங்கடேசன் கூறினார். சந்திப்பின்போது JIH மற்றும் SIOவின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

தஅவா பயிற்சி முகாம்

சென்னை

எஸ்ஐஓ உறுப்பினர்களுக்கான தஅவா பயிற்சி முகாம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐஐசி அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம், அதற்குரிய வழிமுறைகள் சார்ந்தும், அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் சார்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிற மதங்கள், நவீன கால சித்தாந்தங்கள் குறித்த விரிவான பார்வையை சிறப்புரையாளர்கள் வழங்கினர். நிகழ்வில் உரை, கலந்துரையாடல், PPT Presentation போன்றவை இடம்பெற்றன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்: NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து

கோயம்புத்தூர்

NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அதீப்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சர்ஜூன் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்: NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து

திருச்சி

NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் பாலக்கரை பகுதியில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ், முஹம்மது ஜாஃபர் மற்றும் SMI மாவட்ட செயலாளர் ரோஷன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

FIKR MAJLIS: புதிய உறுப்பினர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம்

சென்னை

சென்னை செங்குன்றத்தில் மாநில அளவிலான FIKR MAJLIS எனும் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக Dr. KVS ஹபீப் முஹம்மது, அதாவுல்லா, V.S. முஹம்மது அமீன், நாகூர் ரியாஸ், Dr.முஹைதீன், முஹம்மது சுல்தான் பாகவி, காமராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 100   பங்கேற்பாளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.  

கண்டன ஆர்ப்பாட்டம்: NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து

சென்னை

NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் சென்னை செங்குன்றத்தில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ், முஹம்மது ஜாஃபர் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நாகப்பட்டினம் MLAவுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு

சென்னை

நாகப்பட்டினம் MLA ஆளுர் ஷா நவாஸுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. எஸ்ஐஓ சார்பாக புத்தங்கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கரூர்,புதுக்கோட்டை

கரூர், புதுக்கோட்டை

எஸ்ஐஓ மாநிலத் தலைவர், நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கரூர் மற்றும் புதுக்கோட்டையில் ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஜாஃபர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.

தேசிய கல்வி வளாகச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்

திருச்சி, சென்னை

எஸ்ஐஓவின் தேசிய கல்வி வளாகச் செயலாளர் இம்ரான் ஹுசைன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள கல்வி வளாகங்களில் எஸ்ஐஓ உறுப்பினர்களுடன் சந்திப்பு, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, இஃப்தார் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கோவை

கோயம்புத்தூர்

எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம், மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு

கோயம்புத்தூர்

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, மதுரை, கயத்தாறு

மதுரை, கயத்தாறு

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக மதுரை மற்றும் கயத்தாறு ஊழியர்களுக்கான கூட்டம் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் அப்துல் கஃபூர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். மதுரை கயத்தாறு

Back To Top