Loading....

சுகாதாரத்துறை செயலருடன் எஸ்ஐஓ தமிழக மாநிலக்குழு சந்திப்பு

Loading Events
  • This event has passed.

சுகாதாரத்துறை செயலருடன் எஸ்ஐஓ தமிழக மாநிலக்குழு சந்திப்பு

July 20, 2023

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலரிடம் எஸ்ஐஓ நேரில் வலியுறுத்தல்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஃபாயிஸ் தலைமையிலான குழு தமிழக சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி அவர்களைச் சந்தித்தது.

இச்சந்திப்பின்போது, அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு சேராத சூழலில் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் பற்றியும் செயலரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இது தொடர்பாக பதிலளித்த செயலர் ககந்தீப் சிங் அவர்கள், இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். எஸ்ஐஓ சார்பில் அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குழுவில் எஸ்ஐஓ மாநிலக் கல்விச் செயலாளர் சைஃபுத்தீன், அலுவலகச் செயலாளர் அப்துர்ரஹ்மான், சையது ஷகீல் அஹ்மது, முஷரஃப், ரியாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Details

Date:
July 20, 2023

Venue

சென்னை
Back To Top