- This event has passed.
கண்டன ஆர்ப்பாட்டம்: NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
June 30, 2024
NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் சென்னை செங்குன்றத்தில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ், முஹம்மது ஜாஃபர் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.