- This event has passed.
Kite Festival
August 13, 2023
நாகூரில் நடந்த காற்றாடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக மொபைல் போனுக்கும் ஆன்லைன் கேமுக்கும் அடிமையாகி உள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு வீதி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் வீடியோ கேம் சமூக வலைத்தளம் டிவி போன்றவற்றின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகூரில் காற்றாடி திருவிழா நடைபெறும். அந்த வகையில் நான்காவது ஆண்டாக இன்று நாகூர் கடற்கரையில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பட்டங்களை விட்டனர். சிறந்த பட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.