Loading....

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் குழு கள ஆய்வு

Loading Events
  • This event has passed.

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் குழு கள ஆய்வு

June 1, 2024

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் வசித்துவரும் இந்துக் காட்டுநாயக்கர் என்ற சாதியைச் சார்ந்த மக்களுக்கு சாதிச் சான்றிதழ் சரியாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் அந்தச் சமுதாய மாணவர்கள் 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலை உள்ளது.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை வைத்தது எஸ்ஐஓ.

நேற்று எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டது. இந்துக் காட்டுநாயக்கர் சமுதாயத்தினரையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தது. தீர்வு காண அடுத்தகட்ட முயற்சிகளை எஸ்ஐஓ மேற்கொள்ளவுள்ளது.

Details

Date:
June 1, 2024

Venue

தூத்துக்குடி
Back To Top