- This event has passed.
தஅவா பயிற்சி முகாம்
June 23, 2024
எஸ்ஐஓ உறுப்பினர்களுக்கான தஅவா பயிற்சி முகாம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐஐசி அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம், அதற்குரிய வழிமுறைகள் சார்ந்தும், அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் சார்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பிற மதங்கள், நவீன கால சித்தாந்தங்கள் குறித்த விரிவான பார்வையை சிறப்புரையாளர்கள் வழங்கினர். நிகழ்வில் உரை, கலந்துரையாடல், PPT Presentation போன்றவை இடம்பெற்றன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.